தமிழ் நாடு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்.. ஜி.கே.வாசன் தரப்பினர் குஷி.!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது. அதன்படி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

முன்னதாக சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கிற்கு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம், தேர்தல் ஆனையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close