தமிழ் நாடு

மக்களவை தேர்தலில் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.க., போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் விபரம்.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக தான் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.  அடுத்து பாமக 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தனது வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிக்கவுள்ளது.    

பாமக போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர்கள்  

முதல்கட்ட வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தருமபுரியில் அன்புமணி ராமதாசும், விழுப்புரத்தில் வடிவேல் ராவணனும், கடலூரில் ரா. கோவிந்தசாமியும் போட்டியிடுகின்றனர். அரக்கோணத்தில் ஏ.கே. மூர்த்தியும், மத்திய சென்னையில் முனைவர் சாம்பாலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்திலிங்கம், திண்டுக்கல்லில் ஜோதிமுத்துவும் போட்டியிடுகின்றனர்.

4 தொகுதிகளில் களம் புகும் தேமுதிக வேட்பாளர்கள்  

தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். வடசென்னை தொகுதியில் அழகாபுரம் மோகன் ராஜ் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதியில் ஆர்.அழகர் சாமியும், திருச்சியில் டாக்டர்.இளங்கோவனும் போட்டியிடுகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

1 தொகுதியில் போட்டியிடும் தமாக வேட்பாளர் 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close