ஜம்மு – காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு காரணமானஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பான விவகாரத்தில், உலகில் அனைத்து வல்லரசுகளும், நட்பு நாடுகளும், அண்டைய நாடுகளும் இந்தியாவுக்கு உதவி வருகின்றன, ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் பாகிஸ்தானை தனது பிடியில் வைத்துள்ள சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது. இந்த நிலையில் சீனாவின் இறக்குமதி பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும், அந்த நாட்டின் பொருள்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியாவில் சுதேசி விரும்பிகள் குரல் கொடுத்து விரும்புகின்றனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் இது குறித்து பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் மசூத்அஸாரை உலக பயங்கரவாதியாக அறிவித்து பன்னாட்டு சட்டப்படி விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க நம் நாடு பல இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் விரைவில் தீர்வு காணப்படும்,” என, இந்தியாவுக்கான சீன துாதர், லுவோ சஹுயி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, இந்தியாவுக்கான சீன துாதர், லுவோ சஹுயி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:மசூத் அஸாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில், ஒரு சில காரணங்களுக்காக, சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது பற்றி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். போதிய அவகாசம் உள்ளது; இதில் விரைவில் தீர்வு 

காணப்படும் என, உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இது சீனா தற்போது தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் ஐநாவில் இந்தியாகொண்டுவந்துள்ள  பாதுகாப்பு அவை தீர்மானத்துக்கு சீனா ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Share