கோவா முதல்வரும், முன்னாள் இராணுவத்துறை அமைச்சருமான மனோகர் பரீக்கர் நேற்று(மார்ச் 17) பனாஜி மருத்துவமனையில் காலமானார். பரீக்கர் மறைவால் நாடு முழுவதும் இன்று (மார்ச் 18) தேசிய துக்கம் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய தலைநகர், மாநில தலைநகரில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து நேற்றே கோவா விரைந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணியளவில் பனாஜியில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூரண அரசு மரியாதையுடன் பாரிக்கருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் பரீக்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

Share