தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில் அண்ணனும் தம்பியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிக்களுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.

18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை வெளியிட்டது
ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருக்கு அக்கட்சி அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதே போன்று ஆண்டிப்பட்டி தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் மகாராஜனுக்கும் அக்கட்சி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இரண்டு பேரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது மட்டுமின்றி சுவாரஸ்யமாகவும் உள்ளது என்று தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share