இந்தியா

“மோடி மோடி” என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் ராகுல் காந்தியை வரவேற்ற பெங்களூரு ஐ.டி. ஊழியர்கள் : அவர்களை கைது செய்து கருத்து சுதந்திரத்தை நசுக்கிய கர்நாடக அரசு

இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரில், ஆயிரக்கணக்கான ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. நகரில் உள்ள மிகப்பெரிய ஐ.டி பார்க்கில் ஒன்றான மான்யாத்தா எம்பசி பிஸ்னெஸ் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்குபெற்றார். காக்னிசண்ட், ஐ.பி.எம், நோக்கியா, பிலிப்ஸ் உள்ளிட்ட 60 ஐ.டி நிறுவனங்களின் கிளைகள் இங்கு உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐ.டி ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த ஐ.டி. பார்க்கில், தொழிலதிபர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிகிழ்ச்சியில் பங்கு பெற மான்யாத்தா ஐ.டி பார்க்கில் பணிபுரியும் சாமானிய ஐ.டி ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்பதிவு செய்த தொழிலதிபர்களுக்கு மட்டுமே ராகுல் காந்தியை சந்தித்து உரையாட அனுமதி அளிக்கப்பட்டது.

Rahul Gandhi addressing Entrepreneurs. Tweet by Karnataka Congress

ராகுல் காந்தி அங்கு வருவதை அறிந்த ஐ.டி ஊழியர்கள், அவர் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் ஒன்று கூட துவங்கினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் எதிர்பாராத விதமாக அனைவரும் “மோடி மோடி” என்று கோஷமிட துவங்கினர். இந்த கோஷம் அந்த பகுதி முழுவதும் பரவி, ஐ.டி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி “மோடி மோடி” என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷம் இட்டனர்.

Tweet by Newsroom Post

தொடர்ந்து ராகுல் காந்தி வருகையின் போது “மோடி மோடி” என்று கோஷமிட்ட இளம் ஐ.டி ஊழியர்கள், அதனை தங்கள் கைபேசியில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவெற்றி வருகின்றனர்.

இளம் ஐ.டி ஊழியர்கள் “மோடி” கோஷமிடவே, அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்களை அது கொதிப்படைய செய்ததாக கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கூட்டணி ஆளும் கர்நாடக காவல்துறையை ஏவி விட்டு, ஐ.டி. ஊழியர்களின் கோஷத்தை அடக்க முயற்சி எடுத்தது என ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து ID Card அணிந்திருந்த போதிலும் சில ஐ.டி. ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர் என்றும் செய்திகள் வெளியாயின.

Tweet by News 9

இதனை அடுத்து, சிக்மக்ளூரு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான திரு சி.டி. ரவி அவர்கள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் ஐ.டி. ஊழியர்களை தாக்கியுள்ளனர் என்றும், 3,000 சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்தவரின் மகனான ராகுல் காந்தியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் சாடியுள்ளார்.

Tweet by Chikmagluru M.L.A, Shri C.T Ravi

கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் காங்கிரஸ் கட்சியின் இந்த கருத்து சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக காவல்துறையின் கைது நடவடிக்கையை அடுத்து ஒட்டு மொத்த பெங்களூரு ஐ.டி ஊழியர்களும் கர்நாடக அரசின் மீதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காங்கிரஸ் கூட்டணி கர்நாடக அரசின் செயலுக்கு கர்நாடக பா.ஜ.க கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஐ.டி ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு தனது கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

நிலை இப்படி இருக்க, ராகுல் காந்தி பங்குபெற்ற தொழிலதிபர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தொழிலதிபர்கள் யாரும் மான்யாத்தா ஐ.டி. பார்க்கில் இருப்பவர்கள் இல்லை என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார் ட்விட்டர் வாசி ஒருவர். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தான் 7 – 8 ஆண்டுகளாக மான்யாத்தாவில் பணி புரிவதாகவும், இவர்கள் யாரும் மான்யாத்தா ஐ.டி பார்க்கில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் இல்லை எனவும், அனைவரும் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close