தமிழ் நாடு

தஞ்சாவூர் தி.மு.க வேட்பாளரானார் தொழிலதிபர் சரிதா நாயர் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் லஞ்சம் வாங்கி ஏமாற்றிய எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்!

கேரள மாநிலத்தில், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, சூரிய ஒளி மின்தகடுகள் (சோலார் பேனல்) அமைத்துத்தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பெண் தொழிலதிபரும், நடிகையுமான சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் வெளியே உள்ள சரிதா, அவ்வப்போது நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார்.

காற்றாலை அமைத்து தருவதாகக் கூறி ₹26 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு ஒன்று, கோவை நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. கோவை வடவள்ளியில் சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் நிறுவனம் நடத்தி இந்த மோசடியைச் செய்ததாக, இங்கு கடந்த 2009-ஆம் ஆண்டு 2 நிறுவனங்கள் சரிதா நாயர் மீது வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் கோவை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரிதா நாயர் 2016-ல் ஆஜரானார். முன்னதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சூரிய ஒளி மின்தகடு அமைக்க, முதலீட்டாளர்களிடம் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பணம் பெற்றதாகவும், தன்னிடமும் உம்மன் சாண்டி பணம் பெற்று ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதித்துறை முன்னாள் இணையமைச்சரும், தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தின் பெயர் இடம் பெற்று இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

கல்குவாரி ஒன்றின் வருமான வரி பிரச்சனையைத் தீர்க்க அவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக, நீதிபதி சிவராஜன் ஆணையத்திடம், தான் எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். பழனி மாணிக்கத்திற்கு எதிரான ஆதாரத்தை சோலார் கமிஷனில் ஒப்படைத்துள்ளேன், முறைகேட்டில் சிக்கிய 13 பேரில் 9 பேருக்கு எதிராக ஆதாரம் உள்ளது. இவர்கள் எல்லோருமே என்னிடத்திலிருந்து ₹70 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.   விரைவில் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உம்மன் சாண்டி மற்றும் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அவர்கள் தங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி தப்பித்து வருவதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தான் கடவுளை நம்புவதாகவும், அவர் தன்னை காப்பாற்றுவார் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் அன்று கூறினார் சரிதா நாயர்.

இந்த ஊழல் பேர்வழி பழனி மாணிக்கத்தை தான் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க-வின் தஞ்சாவூர் வேட்பாளராக இன்று அறிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.  

Tags
Show More
Back to top button
Close
Close