செய்திகள்

தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கிய அ.தி.மு.க மற்றும் பா.ம.க

மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை நிறைவு பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

தென் சென்னை – ஜெயவர்தன் 

திருவள்ளூர் (தனி) – டாக்டர் P வேணுகோபால்

காஞ்சிபுரம் (தனி) – மரகதம் குமரவேல்

கிருஷ்ணகிரி – கே.பி முனுசாமி

திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி – செஞ்சி ஏழுமலை

சேலம் – KRS சரவணன்

நாமக்கல் – P.காளியப்பன்

ஈரோடு – G.வெங்கு(எ)மணிமாறன்

திருப்பூர் – M.S.M ஆனந்தன்

நீலகிரி (தனி) – M. தியாகராஜன்

பொள்ளாச்சி – C. மகேந்திரன்

கரூர் – M. தம்பிதுரை

பெரம்பலூர் – N.R. சிவபதி

சிதம்பரம் (தனி) – சந்திரசேகர்

மயிலாடுதுறை – S.ஆசைமணி

நாகப்பட்டினம் (தனி) – சரவணன்

மதுரை – VVR ராஜ்சத்யன் 

தேனி – ரவீந்திரநாத் குமார்

நெல்லை – மனோஜ் பாண்டியன்

இந்நிலையில் பா.ம.க-வும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-விற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 7 தொகுதிகளில் முதற்கட்டமாக 5 தொகுதிகளுக்கான  வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ் 

2. விழுப்புரம்: வடிவேல் ராவணன் 

3. கடலூர்: இரா.கோவிந்தசாமி 

4. அரக்கோணம்: ஏ.கே.மூர்த்தி 

5. மத்திய சென்னை: சாம் பால் 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சமூக ஊடக பிரிவில் இருக்கும் கட்சி தொண்டர்களுக்கு இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மக்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை இரண்டு கட்சிகளும் உணர்ந்துள்ளது தெரிகிறது.

மதுரை தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக களம் இறங்கும் ராஜ் சத்யன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருக்கிறார். மத்திய சென்னை தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சாம் பால் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கிறார்.

Tags
Show More
Back to top button
Close
Close