செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு : மு.க.அழகிரி சூசகம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து மு.க. அழகிரி பதிலளித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார்.

‘ஆதரவு கேட்டு மு.க.அழகிரியைச் சந்திப்பேன். ஆதரவு கேட்பேன்’ என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

இந்தநிலையில், மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறொன்றுமில்லை”, என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close