இந்தியா

மரணத்துக்கு அஞ்சாமல் இறுதி மூச்சு வரை மக்கள் பணியாற்றிய மாமனிதன் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்! #ManoharParrikar

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டு முறை அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்து வந்தது. இருப்பினும், சிகிச்சை எடுத்துக்கொண்டே அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கலந்து கொண்டிருந்தார். 

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்து விட்டதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே, மனோகர் பாரிகரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மாநில முதல்வர் அலுவலகம் இன்று மாலை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

அதில், “பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பாரிக்கர் மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் பிரச்சாரப் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு கோவா சென்று கொண்டிருக்கின்றனர்.

மரணம் தனக்கு நிச்சயம் என்று தெரிந்தும் கூட நோயின் தீவிரம் மற்றும் வலிகளுக்கிடையிலும் மரணத்தை தன் தோளில் சுமந்து கொண்டே கடைசி நிமிடம் வரை மக்களுக்காக பணியாற்றிய மாவீரன், மாமனிதன் பாரிக்கர். வெளிநாட்டு கலாச்சாரம், பண்பாட்டால் கோவா மாநிலத்தின் பூர்வீக பண்பாடு சீர்கெடாமல் பாதுகாத்து இந்து மக்களின் எழுச்சி நாயகனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் கோவா மாநிலத்தையும், பாரதத்தையும்  அதிர்ச்சியடைய செய்துள்ளது.

“மனிதனின் மனதால் எந்த ஒரு நோயையும் வெல்ல முடியும்” என நோய்வாய்ப்பட்ட நிலையில் தன்னம்பிக்கை தெரிவித்திருந்த மனோகர் பாரிக்கர் என்ற மகத்தான மனிதர் காலமானார்.

Tags
Show More
Back to top button
Close
Close