இந்தியா

லோக்பால் அமைப்புக்கு தலைவர் நியமனம்: பிரதமர் மோடியின் முடிவுக்கு அன்னா ஹசாரே மகிழ்ச்சி..!

அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகிசந்திரா ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2014 ல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் நியமனம் செய்ய வேண்டிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இந்தக்குழுவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி , சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அடங்குவர். விரைவில் தலைவர் நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தி இருந்தது. 

இந்த குழு பல ஆண்டுகளாக சரியான நபரை தேர்வு செய்வதில் கால அவகாசம் ஏற்பட்டது. இந்நிலையில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகிசந்திரா ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகலாம்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இது மகிழ்ச்சியானது , ஊழலை ஒழிக்க உதவும். ஊழலை வெளிக்கொணர வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி இவ்வாறு அவர் கூறியுள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரன்பேடி , இது மிக வரவேற்புக்குரியது. வரலாற்று முக்கிய நாள், இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் விஷயம் என கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close