செய்திகள்

லேண்ட் லைன் இணைப்புகளுக்கு இலவச நெட் வசதி !! பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடி

லேண்ட் லைன் இணைப்புகளுக்கு இலவச நெட் வசதி அளிக்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.  
   
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சாதாரண தொலைபேசி (தரைவழி இணைப்பு) கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம்  அறிமுகம் செய்தது.

தரைவழி இணைப்பு பெற்றிருப்பவர்கள் இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை தொலைபேசி அழைப்பு மூலமே பெறலாம் என அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றையும் அறிவித்து உள்ளது. அதன்படி 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.

Tags
Show More
Back to top button
Close
Close