Amazon Great Indian Sale - 2019

17-வது மக்களவைத் தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலையும், சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியளையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி ஒரு தொகுதியை சேர்த்து 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 1 தொகுதியும் (ஒரு மாநிலங்களவை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும், கொமதேகவுக்கு 1 தொகுதியும், ஐஜேகேவுக்கு 1 தொகுதிகள் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Advertisement Amazon Great Indian Sale - 2019

இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் விவரம்

  • வட சென்னை – கலாநிதி வீராசாமி
  • தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  • மத்திய சென்னை – தயாநிதி மாறன்
  • ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  • காஞ்சிபுரம்(தனி) – செல்வம்
  • அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  • வேலூர் – கதிர் ஆனந்த்
  • தருமபுரி – டாக்டர் எஸ்.செந்தில்குமார்
  • திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை
  • கள்ளக்குறிச்சி – கவுதமசிகாமணி
  • சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன்
  • நீலகிரி (தனி) – ஆ.ராசா
  • பொள்ளாச்சி – குல.சண்முகசுந்தரம்
  • திண்டுக்கல் – வேலுச்சாமி
  • கடலூர் – டி.ஆர்.வி. ரமேஷ்
  • மயிலாடுதுறை – செ.ராமலிங்கம் அல்லது ஜெகவீரபாண்டியன்
  • தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
  • தூத்துக்குடி – கனிமொழி
  • தென்காசி(தனி) – தனுஷ்குமார்
  • திருநெல்வேலி – ஞானதிரவியம்

சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

  • பூந்தமல்லி – ஆ. கிருஷ்ணசாமி
  • பெரம்பூர் – ஆர்.டி. சேகர்
  • திருப்போரூர் – எஸ்.ஆர். எல். இதயவர்மன்
  • சோளிங்கர் – அ. அசோகன்
  • குடியாத்தம் – எஸ். காத்தவராயன்
  • ஆம்பூர் – அ.செ. விஸ்வநாதன்
  • ஓசூர் – எஸ்.ஏ. சத்யா
  • பாப்பிரெட்டிப்பட்டி – ஆ. மணி
  • அரூர் – செ. கிருஷ்ணகுமார்
  • நிலக்கோட்டை – சி. சவுந்திரபாண்டியன்
  • திருவாரூர் – பூண்டி கே. கலைவாணன்
  • தஞ்சாவூர் – டி.கே.ஜி. நீலமேகம்
  • மானாமதுரை – கரு. காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்
  • ஆண்டிப்பட்டி. ஏ. மகாராஜன்
  • பெரியகுளம் – கே.எஸ். சரவணகுமார்
  • சாத்தூர் – எஸ்.வி. சீனிவாசன்
  • பரமக்குடி – ச. சம்பத்குமார்
  • விளாத்திகுளம் – ஏ.சி. ஜெயக்குமார்
  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை திங்கள்கிழமை அல்லது நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
Share