2019 தேர்தல்செய்திகள்

“சன் ரைஸ்” – 6 தொகுதிகளில் கட்சியின் வாரிசுகள் : குடும்ப அரசியலின் உச்சத்தில் தி.மு.க

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க வெளியிட்டுள்ளது. குடும்ப அரசியலுக்கு பெயர் போன தி.மு.க வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. தற்போது மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், தி.மு.க-வில் வாரிசுகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. நியூஸ் J வெளியிட்டுள்ள செய்தியில் தி.மு.க வாரிசு வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

அதன் படி, தூத்துக்குடியில் கருணாநிதியின் மகளான கனிமொழி போட்டியிடுகிறார். மத்திய சென்னை தொகுதியில் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் போட்டியிடுகிரார். கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி போட்டியிடுகிறார். தென்சென்னை தொகுதியில் தி.மு.க மூத்த தலைவர் தங்கப்பாண்டியனின் மகனும் , தங்கம் தென்னரசின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

சென்னை வடக்கு தொகுதியில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். தி.மு.க-வில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பலர் இருந்தும், வாரிசுகளுக்கு மட்டுமே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுவது அக்கட்சித் தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்றும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close