2019 தேர்தல்செய்திகள்

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் பேசியது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கலந்துரையாடிய நிகழ்ச்சி தொடர்பாக, மாவட்ட அதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளது தோ்தல் ஆணையம். பா.ஜ.க-வின் சட்டப் பிரிவை சோ்ந்தவா்கள் தெரிவித்த புகார் மனுவின் அடிப்படையில், இந்த விளக்கத்தைக் கோரியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் தோ்தல் பிரச்சாரங்களை நடத்த சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அனுமதி இருந்தாலே போதும். ஆனால், அந்தக் கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்தே நடத்தியதாக தமிழக பா.ஜ.க-வின் சட்டப் பிரிவைச் சோ்ந்தவா்கள் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்டத் தோ்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான பிரகாஷிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவரது விளக்கத்துக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Tags
Show More
Back to top button
Close
Close