செய்திகள்

மேற்குவங்கத்தில் வேகமாக மலரும் தாமரை : திருணாமுல், காங்கிரஸ் கட்சிகளிலிருந்து அணி அணியாக பா.ஜ.க-வில் இணையும் தலைவர்கள், தொண்டர்கள்!அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜியின் தன்னிச்சையான போக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி மற்றும் உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் இஷ்டப்பட்ட ஆட்களுக்கு சீட் அளித்தல், முன்கோபம், சாரதா நிதி மோசடி விவகாரத்தில் கட்சி பெயர் கெட்டுப்போனது இவற்றால் ஏராளமான திருணாமுல் காங்கிரசார் அனைத்து மாவட்டங்களிலும் மம்தா மீது அதிருப்தியாக உள்ளனர். என்றாலும் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரசுக்கு எதிராக அங்குள்ள மக்களின் சிந்தனைகள் வளர்ந்து வருவதால் அவர்களுக்கு வேறு கட்சிக்கு தாவ முடியாமல் இருந்தனர்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது பா.ஜ.க நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்களிடம் அதிக வரவேற்பும் உள்ளது. குறிப்பாக மோடி மற்றும் அமித்ஷா மீது அங்கு அதிக பற்று வளர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலையில் திருணாமுல் காங்கிரசுக்கு சவால் விடும் கட்சியாக பாஜக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஏராளமான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பா.ஜ.க பக்கம் சேர்ந்து வருகின்றனர். இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆடிப்போய் உள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் முகல் ராய் பா.ஜ.க-வில் சேர்ந்த பின், நீண்ட காலத்துக்குப் பின் அக்கட்சியைச் சார்ந்த ஏராளமானோர் இப்போது பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தற்போது பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கூடுதலாக புதிதாக கட்சியில் சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் மம்தா பானர்ஜி. இதனால், இந்த முறை புதிய முகங்கள் 18 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகத் தொண்டர்களாக இருந்தவர்கள், இந்த முறை சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், திரைப்பட நடிகைகளுக்கு சீட் தந்துள்ளார் மம்தா பானர்ஜி.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சவுமித்ரா கான், அனுபம் ஹஸ்ரா, மூத்த தலைவர் அர்ஜுன் சிங் ஆகியோருக்கு இந்த முறை திரிணமூல் காங்கிரஸில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் அதிகமான அளவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்வார்கள் என்று அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “அடுத்து சில நாட்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமான முக்கியத் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணையப் போகிறார்கள். எங்கள் விளையாட்டு தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், “கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து எங்கள் கட்சியில் இருந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் ஏராளமான தலைவர்கள் விலகிச் சென்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். இப்போது, எங்களுக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு நடக்கிறது” எனத் தெரிவித்தார். இதனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close