இந்தியா

தரை அதிர பறக்கும் இந்திய போர்விமானங்கள் – அதிகாலையிலிருந்து எல்லையில் நிலவும் பதற்றம்..? உதறலில் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுப்பட்டதால் எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டன.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை காஷ்மீர் எல்லையில் பல இடங்களில் தாக்குதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து விமானங்கள் பறந்ததால் எல்லையில் மீண்டும் போர் பதட்டம் நிலவியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள எல்லையிலும் இந்திய விமானங்கள் இன்று அதிகாலை திடீர் போர் பயிற்சிகள் செய்தன.

இதனால் பஞ்சாபிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போர் பயிற்சி பற்றி ராணுவ தரப்பில் கூறுகையில், எல்லையில் எந்த சவால் வந்தாலும் சமாளிப்பதற்காக பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடத்தப்பட்டது என்று கூறினார்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close