செய்திகள்

பொள்ளாச்சியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க பிரமுகரின் மகன் : கிடு கிடு வென அதிகரிக்கும் தி.மு.க-வினரின் பாலியல் வன்கொடுமைகள்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், கோவை மாவட்ட தி.மு.க ஆதி திராவிடர் துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் கவின், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12 ம் தேதி மாலை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமையில் சேர்த்தனர். சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் கவின் கைது செய்யப்பட்டார் என்று நியூஸ் J செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

சம்பவத்தன்று சிறுமியின் தாய் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது சிறுமி வீட்டில் இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.

இதனையடுத்து அவரது தாயார் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது எதிரே உள்ள வீட்டின் கதவை தட்டினார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் கதவை திறந்தான்.

அப்போது வீட்டில் உள்ள இரும்பு கட்டில் அடியில் இருந்து சிறுமி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார். இதனை பார்த்து சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

சிறுமியிடம் விசாரித்த போது சிறுமிக்கு 12-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார் என்று மாலைமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக, சிறுமியை கூட்டாக கற்பழித்து கொன்ற முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு கடந்த டிசம்பர் மாதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிக்கு, கடந்த நவம்பர் மாதம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மகளிர் நீதிமன்றம் வழங்கியது.

சென்ற ஆண்டு, தி.மு.க நடத்திய போராட்டத்தின் போது தனது கட்சியை சேர்ந்த ஆண்களே, பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து #இடுப்புகிள்ளிதிமுக என்ற ஹெஷ்டேகை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close