செய்திகள்

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த மிகப்பெரிய இடி : பா.ஜ.க-வில் இணைந்தார் சோனியாவுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் தலைவர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரும் இழப்பாக, மூத்த காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்தியின் நெருக்கமான தலைவர்களில் ஒருவருமான டாம் வடக்கன் வியாழக்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

UPA தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய தலைவராக இருந்த வடக்கன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடை கடுமையாக சாடினார். இந்தியா வான் வழி தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை காலி செய்தது குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகித்தது தனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது என்று கூறினார்.

Tweet by ABP News

“இந்திய படைகளின் நேர்மையை நீங்கள் கேள்வி கேட்கும்போது, ​​நான் மிகவும் வருந்துகிறேன், அதனால் தான் நான் இப்போது இங்கே இருக்கிறேன்” என்று அவர் கூறினார். பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸின் நிலைப்பாடு வருந்தத்தக்க நிலையில் இருந்தது என்று குறிப்பிட்ட அவர், “சுய மரியாதை உள்ள எவருக்கும் காங்கிரஸ் கட்சியில் இடமில்லை“, என்று வருத்தத்துடன் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close