பொள்ளாச்சி பெண் பலாத்கார வழக்கு மற்றும் ஆபாச வீடியோ வழக்கில் இதுவரை அகப்பட்ட குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்தை முன்னிட்டும் குற்றவாளிகள் வெளியே தப்பிக்கா வண்ணம் மேலும் குண்டர் சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாலும், ஆளும் கட்சியே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவும் தயாராக இருப்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த வழக்கு நகரத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் குட்டையை குழப்பி திமுகவினர் மீன் பிடிக்கும் விதத்தில் சில பத்திரிகைகள் மீடியா அரசியலை செய்து வருவதாகவும் இதனால் மீடியாக்களுக்கு அஞ்சி வீடியோவில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் மற்ற பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த பிரச்சினையை ஒரு தரப்பு பிரச்சினையாக்கி மக்களை குழப்பும் முயற்சிகள் நடைபெறுவதால் யாரும் வதந்திகளை நம்பி பலியாடு ஆக வேண்டாம் என இந்த விவகாரத்தை உற்று கவனித்துவரும் ஊடகர்கள் சமூக வலைதளங்கள் வழி கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் பாயிண்ட்..பாயிண்ட்டாக கீழே அளிக்கப்பட்டுள்ளன.  

 புகார் அளித்திருக்கும் அந்த பெண் சென்ற Feb -16 ம் தேதிதான்  திருநாவுகரசுக்கு பழக்கம் ஆகியிருக்கு..

வாட்ஸ்சப்ல பெண்ணின் அப்பாவுக்கு தெரிந்த நபர்னு சொல்லி அறிமுகம் ஆகி பழக்கத்த வளத்துருக்கான்..

அப்புறம் பழக்கம் அதிகம் ஆகி Feb 23 ம் தேதி அந்த பெண் திருநாவுகரசு கூட கார்ல போயிருக்கு.. கூட சபரிராஜன் இருந்துருக்கான்..

கார்லயே அந்த பெண்ண தவறான முறையில தொட்டு இருக்கிறார்கள் .. ஆனா அந்த பொண்ணு கார்லயே கத்தி கூச்சல் போடவும் அந்த பெண் கழுத்துல இருந்த 1பவுன் செயின புடுங்கிட்டு ரோட்டுல தள்ளி விட்டு போயிட்டானுக..

கார் உள்ளே நடந்ததை சபரிராஜன் போன்ல வீடியோ எடுத்துருக்கான்.. அடுத்த நாள் அந்த பொண்ணுக்கு சபரிராஜன் போன் பண்ணி பணம் வேணும் இல்லைனா வீடியோவ நெட்ல விட்ருவேண்னு மிரட்டி யிருக்கிறான் ..

அந்த பெண் அவங்க அண்ணன் கிட்ட சொல்ல அவங்க அண்ணனும், சொந்தக்காரங்களும் சேந்து திருநாவுக்கரசு & சபரிராஜன ரோட்டுல வச்சி அடிச்சிருக்காங்க.. (நீங்க அந்த வீடியோ பாத்துருப்பீங்க)

அப்போ தான் அவங்க போன்கள வாங்கி தன்னோட தங்கச்சியோட வீடியோவ Delete பண்ண வாங்கியிருக்காங்க.. அப்போதுதான் அதுல அவர் தங்கச்சி வீடியோவ தவிர மேலும் 150 பெண்களோட வீடியோ இருந்துருக்கு..

இதப்பார்த்து அதிகமா அடிச்சி உதச்சப்போ இதே மாதிரி மிரட்டி பணம் பிடுங்க பல பெண்கள மிரட்ட வீடியோ எடுத்து வச்சத ஒத்துகிட்டானுக.. (அந்த வீடியோவுலயே தெரியும்.. மீடியா இதை கட் பண்ணி  கட் பண்ணி போட்டுச்சி)

இதை பத்தி முதல்ல போலீஸ் கிட்ட புகார் குடுக்க முயற்சி பண்ணி  போலீஸ் வழக்க எடுக்காம தட்டிக் கழிச்சிருக்கு..

அதனால அந்தப் பெண்ணும், அவங்க அண்ணனும் தெரிந்த உறவினர்கள் மூலமா பிப்ரவரி 25 ந்தேதி  MLA பொள்ளாச்சி ஜெயராமன அணுகியிருக்காங்க…

பொள்ளாச்சி ஜெயராமன் இது குறித்து உடனே கோவை SP கிட்ட சொல்லி வழக்கு பதிஞ்சிருக்காங்க..

வழக்கு பதிஞ்சி சதீஷ், சபரிராஜன கைது பண்ணி திருநாவுக்கரச ஆந்திராவுல கைது பண்ணிட்டாங்க.. அப்ப தான் சபரிராஜனோட நண்பரான நாகராஜன் அந்த பெண் வீட்டுல பண பேரம் & மிரட்டல் செஞ்சிருக்கான்..

அவனையும் கைது பண்ணி அடிதடி போன்ற வழக்கு போட்டு சிறைல அடச்சிருக்காங்க.. அவன் ஜாமீன்ல வெளிய வந்துட்டான்..

இப்ப அந்த ஒரே ஒரு பெண் குடுத்த வழக்குல மட்டும் தான் போலீஸ் விசாரணை & நடவடிக்கை எடுத்துருக்கு..

அந்த பெண் இதுவரைக்கும் கற்பழிப்புனு வழக்கு குடுக்கல.. தன்னை மானபங்க படுத்தினதா தான் வழக்கு குடுத்துருக்கு..

அந்த FIR படி அந்த 4 பேர் மேலயும் 4 பிரிவுகள்ல பதியபட்ட வழக்குகள் :

IPC 354A – பெண்ணை மானபங்க படுத்துதல், துன்புறுத்துதல் (இது உறுதி படுத்தப்பட்டா 5 வருச தண்டனை கிடைக்கும்)

IPC 354B – பெண்ணின் ஆடைகளை அவிழ்த்தல், கிழித்தல் (இது உறுதி படுத்த பட்டா 7வருச தண்டனை கிடைக்கும்)

IPC 392 – வழிப்பறி செய்தல் செயின் பறிச்சதால இந்த பிரிவு (இது உறுதி செய்யபட்டா 10வருசம் தண்டனை கிடைக்கும்)

IT ACT 66E – ஆபாசமாக புகைபடம் எடுத்தல்.. நீங்க உங்க போன்ல ஒரு பெண்ணை ஆபாசமா வீடியோ எடுத்தாலே போதும் இந்த பிரிவுக்கு (இது உறுதி செய்யப் பட்டா 3வருசம் தண்டனை கிடைக்கும்)

இதுபோக தமிழகத்தோட சிறப்பு சட்டம் ஒன்னும் போட்ருக்காங்க..
TamilNadu Womens Harresment Act Section 4 – இது பெண்களை கொடுமை படுத்துதல், துன்புறுத்துதல் போன்ற பிரிவு.. (இது உறுதி படுத்தப்பட்டால் 3 வருசம் தண்டனை கிடைக்கும்)
.
இது போக குண்டர் சட்டம்..
.
ஆக மொத்தம் இந்த வழக்கு நிரூபிக்கப் பட்டால் 30 வருஷமாவது சிறையில இருக்கனும்..
.
சிலர் சொல்ற மாதிரி அரசோட அழுத்தம் இருக்கு கட்சி பின்னாடி இருக்குனா இப்படி பட்ட பிரிவுகள போட முடியுமானு யோசியுங்க..
.
அது போக இந்த பிரிவுகள்ல வழக்கு போட்டு 2நாட்கள் முன்னாடியே வழக்க CBCID க்கு மாற்றியது தமிழக அரசு.. இன்று அதையும் CBIக்கு மாற்றி இருக்காங்க..
.
இன்னொரு விஷயம் உடனே சுடுங்க, தூக்குல போடுங்கனு சிலர்ஆத்திரப்படுகிறார்கள் … ஒரு பெண்ண கற்பழிச்சா தான் அவன் மேல அந்த பிரிவ வச்சி வழக்கு போட முடியும்..
.
வழக்கு யாரும் குடுக்காம போன்ல இருக்க வீடியோ அடிப்படைல ஒருத்தர கைது பண்ணி வழக்கு போட்டா நாட்டுல உள்ள 90% இளைஞர்கள் தங்கள் போன்ல பிட்டு படத்த வச்சிருப்பாங்க.. அந்த பெண் யாருனே தெரியலனாலும் பரப்புனதா யாராவது வழக்கு குடுத்தா நீங்களும் கைது செய்யப்படலாம்..
.
அப்படி செய்தால் அது நியாயமா இருக்குமா..? உங்க Galleryய ஒரு முறை பார்த்துக்கொள்ளும் நெலமை வரும் ..
.
அதனால எந்த புகாரும் இல்லாம யார் மேலயும் வீடியோ & கேள்வி செய்திகள வச்சி வழக்கு போட முடியாது அவங்களே ஒத்துகிட்டு 10 பெண்களோட பெயர் & அடையாளங்கள சொன்னாலும் அந்த பொண்ணுக ஒத்துகிட்டு இவனுக மேல வழக்கு குடுத்தா மட்டும் தான் கற்பழிப்பு வழக்கு போட முடியும்..
.
இதுவரை எந்த பெண்ணும் தன்னை கற்பழிச்சதா அவங்க மேல புகாரோ, வழக்கோ குடுக்கல.. பின்ன எப்படி இத பெரிய கேசா இதுக்கு மேல பண்ண  முடியும்னு தெரியல ..
.
இப்படி அரசியல் ஆக்கி 24மணி நேரமும் மீடியா நோட்டமிடும் ஒரு வழக்காக இதை மாத்தி நீங்க போராடிட்டு இருந்தா எப்படி ஒரு உண்மைலயே கற்பழிக்கபட்டு பாதித்த பெண் வழக்கு குடுக்க முன் வருவாங்க..?????
.
இதெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் நக்கீரன்ல வந்தது என்ன வீடியோ..? அந்த வீடியோக்கள் எப்படி கிடச்சது..? அந்த வீடியோவுல உள்ள பெண் யார்..? அந்த சம்பவம் உண்மைலயே நடந்துச்சானு எந்த உண்மையான ஆதாரமும் இதுவரை இல்லை..

.இதுக்கு மேல நீங்க உடனே நியாயம் வேணும், நடவடிக்கை எடுக்கனும்னு ரோட்டுல நின்னா நீங்களும் இந்த மீடியா அரசியலுக்கு பலி ஆன ஆடுகள் தான்..

யாராவது சொல்றதையும், விஷயத்த முழுசா புரிஞ்சிகாமலும் உணர்ச்சி வசப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share