செய்திகள்

மசூத் அசார் விவகாரத்தில் உதவ மறுப்பு – சீனாவுக்கான வர்த்தக சலுகைகளை ரத்து செய்யுங்கள் – ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்!

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் ஆசாரை அறிவிக்க மறுத்த சீனாவுக்கு, இந்தியா வழங்கியுள்ள வர்த்தகத்துக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய கோரி, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பொருளாதார பிரிவாக செயல்பட்டு வரும் சுதேசி ஜக்ரான் மஞ்ச் எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கிய சலுகைகளை ரத்து செய்தது போன்று சீனாவுக்கும் வர்த்தக ரீதியாக எந்த சலுகைகளும் வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து அதிகளவு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் எனவும் கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் நேரு, இந்தியாவும் சீனர்களும் சகோதர்கள் என முழங்கிய போதும் சீனா நேருவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கம், இந்தியர்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

Tags
Show More
Back to top button
Close
Close