செய்திகள்

காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய நடிகர் மாதவன் : எதற்கு தெரியுமா?

ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீன அரசு சற்று காலம் தாழ்த்தி வருவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவை தரக்குறைவாக விமர்சித்து அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து பல காணொளிகளை பகிர்ந்து வருகிறது. இந்தியாவை இழிவு படுத்தும் வகையில் இருக்கும் காணொளி ஒன்றை மேற்கோள் காட்டி, நடிகர் மாதவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tweet by Actor R Madhavan

நடிகர் மாதவன் பதிவிடுகையில், “இது மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. மோடி அவர்கள் நமது நாட்டின் பிரதமர். என்னதான் அரசியல் எதிரியாக இருந்தாலும் சீனாவின் முன்பு இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் இருக்கும் இந்த காணொளியை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை”, என்று பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close