செய்திகள்

ராகுல் காந்தி ரொம்ப “க்யூட்” : தமிழக இளம் மாணவிகளை தவறாக வழி நடத்துகிறதா காங்கிரஸ் ?

தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள பொள்ளாச்சி சம்பவங்களின் சர்ச்சை ஓய்வதற்கு முன்பாகவே அடுத்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இளம் பெண்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, பிறகு அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த வாலிபர்களை காவல்துறை கைது செய்துள்ளது உலக தமிழர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றிய செய்திகள் உலா வரும் சமயத்தில் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரியான ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு விஜயம் செய்து, இளம் மாணவிகளின் கூட்டத்தின் மத்தியில் உரையாடி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினை போன்றே ராகுல் காந்தியும் உளறிக்கொட்டி இருப்பது ஒரு புறம் இருக்க, தமிழக இளம் மாணவிகள் ராகுல் காந்தியை எப்படி பார்க்கின்றனர் என்பது அடுத்த சர்ச்சையாக வெடித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிறப்பட்ட காணொளி இது. இதில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி உரையாடி இருப்பது குறித்து இளம் மாணவி ஒருவர் கூறுகையில், “இவர் ரொம்ப க்யூட்”, என்று கூறியுள்ளார்.

Tweet by Congress

இந்த காணொளியை அந்த மாணவிகளோ அல்லது அந்த கல்லூரியில் உள்ள வேறு யாரேனும் பகிர்ந்திருந்தால் பரவாயில்லை. இந்த காணொளியை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியே பகிர்ந்துள்ளது. இந்த காணொளியை பார்த்து பலரும் பல விதமான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன் வைத்து வருகின்றனர்.

மற்றொரு காணொளியில், ராகுல் காந்தி அணிந்திருக்கும் உடை நன்றாக இருந்தது. அவர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார் என்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயிலும் இளம் தமிழக மாணவிகள் தெரிவித்ததன் காணொளியை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த காணொளியை காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா பகிர்ந்துள்ளார்.

பெண்கள் கல்லூரியில் உள்ள இளம் தமிழக மாணவிகளை காங்கிரஸ் கட்சி தவறாக வழி நடத்துகிறதோ என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பபட, சினிமா துறையில் இருப்பவர்களுக்கு தேவைப்படும் விளம்பரம் போல இந்த விளம்பரம் அமைந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

இந்தியாவில் உள்ள பழம் பெரும் அரசியல் கட்சியும், பாரத தேசத்திற்கு ஒப்பில்லா பல தலைவர்களை தந்த காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைமைக்கு இளம் மாணவிகளின் விளம்பரம் ஒரு தேவையாக மாறியிருக்கும் தருணத்தில் இது போன்ற விளம்பரங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags
Show More
Back to top button
Close
Close