இந்தியா

பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மன்மோகன்சிங்கைவிட மோடிதான் சூப்பர்.. டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் பொளேர்..!

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லிமாநில காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீக்ஷித் இன்று சி.என்.என்.- செய்தி 18 நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் புல்வாமா தாக்குதலுக்கு இராணுவம் கொடுத்த பதிலடி குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறுகையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மேல் பாலக்கோடு தாக்குதல் தொடுத்தது மோடியின் வலிமையான நடவடிக்கை தான்.

அதே சமயம்  2008 ம் ஆண்டு 10 தீவரவாதிகள் மும்பைக்குள் புகுந்து 100 கும் மேற்பட்ட அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். ஆனால் அப்போது மன்மோகன் சிங்கால் மோடி போல வலிமையாக செயல்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் மோடி வலிமையாக செயல்பட்டாலும், இதுபோன்ற வெற்றிகளை தனது  கட்சியின் அரசியல் பலன்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்றார்.

அடுத்து தேச பாதுகாப்பு விஷயத்தில் மோடி செய்ததுதான் சரி என நம்பும் நாட்டு மக்கள் அவர் பின்னால் திரண்டு நிற்பதாகவும், அவர்தான் வலிமையான பிரதமர் எனவும் மக்கள் உணர்வதாகவும் இது குறித்து தங்கள் பதில் என்ன என பத்திரிக்கையாளர் கேள்வி  கேட்டார்.

அதற்கு தீட்க்ஷித் பதில் கூறுகையில் மோடியைப் போன்று பராக்கிரம செயல்களை செய்தவர் இந்திரா காந்தி என்றும், மோடி புதியதாக எதையும் செய்யவில்லை என்றும், என்றாலும் தேச பாதுகாப்பு விஷயத்தில் மோடியின் நடவடிக்கை சரியானதுதான் என்றார்.

இதை அடுத்து, ஷீலா தீட்க்ஷித் இன்று பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தான் கூறியதை ஊடகங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close