தமிழ் நாடு

விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ராமதாஸ்..!

இன்று காலை விஜய்காந்த் வீட்டுக்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி உடல்நலம் குறித்து விசாரித்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து பேசினார்.  ராமதாஸ் உடன் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்” என்றார். இரு தலைவர்களின் சந்திப்பு கூட்டணி கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close