Amazon Great Indian Sale - 2019

சென்னை வந்திருந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரி கல்லூரி சென்று அங்கு நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் என்ற பெயரில் மோடியை குறிவைத்தே பல எதிர் கருத்துக்களை அவர் அடிக்கடி கூறினாலும், யாரும் மோடி எதிர்ப்பு பேச்சுக்களுக்கு வரவேற்பளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்போது, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கும்போது: என்னுடைய கொள்கை எப்போதுமே பரந்து விரிந்த மனப்பான்மையை சார்ந்தது. குறிப்பிட்ட ஒரு கொள்கை என்பது நாட்டை கட்டுப்படுத்தக்கூடாது. தற்போதைய பிரதமர் மோடி அரசு, சுப்ரீம் கோர்ட், அரசியல் சாசன அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றார்.

Advertisement Amazon Great Indian Sale - 2019

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது. ஆனால் இந்தியா குறைந்த அளவிலேயே செலவிடுகிறது என்று மோடி அரசை குறை கூறினார்.

24 மணி நேரத்தில் சீனாவில் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் 300 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன என அலாக்காக ஒரு தவறான பொய்யான புள்ளிவிவரத்தை கொடுத்து சீனாவை புகழ்ந்தார்.

தொடர்ந்து, ராபர்ட் வாத்ரா விவகாரம் குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது, அவரை பற்றி என்ன ? என்று மழுப்பி, நேரடியாக பதில் கூறாமல் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டு என்றால் யார் மீது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்று கூறி மோடி மீது சரமாரி குறை கூறினார்.  

மேலும் ஒரு மாணவியிடம், “இந்த உலகத்தை உங்கள் இடத்தில் இருந்து பார்க்காதீர்கள், மாறாக உங்கள் இடத்தில் இருந்து பாருங்கள்” என்று உளறி கொட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகியது. தி.மு.க தலைவர் ஸ்டாலினை போலவே உளறுகிறார், அவருக்கு ஏத்த ஜோடி என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.

மேலும் பேசிய ராகுல், மோடியுடன் நெருக்கமாக காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். ஆனால், காஷ்மீர் மக்களிடம் மோடி நெருக்கமாக விரும்பவில்லை என்றார். மேலும் மோடி மீதான அன்பை வெளிப்படுத்தவே அவரை கட்டிப்பிடித்தேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். அடுத்து அவரிடமிருந்து நான் சில அரசியல் விஷயங்களை கற்றுக் கொண்டேன், அதனால்தான் அவரை கட்டி பிடித்தேன் என்றார்.

அடுத்து என் மீதான அவரது கோபத்தை குறைக்கவே கட்டிப் பிடித்தேன் என்றார். என் மீது அவருக்கு அன்பு இல்லாவிட்டாலும், அவர் மீது எனக்கு அன்பு உள்ளது, அதனால் கட்டிபிடித்தேன் என்றார். இப்படி அவர் மோடி மீது குற்றம் கூறியே அவருக்கு எதிரான ஒரு வெறுப்பை உருவாக்கும் நோக்கத்திலும், பா.ஜ.க அரசின் மீது பொய்யான புள்ளிவிபரங்களை கூறினாரே தவிர மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு சிறந்த பதில்கள் எதையும் அவர் தரவில்லை. மாணவிகள் எந்த பொதுவான கேள்வி கேட்டாலும் இவர் மோடியை தொடர்பு படுத்தியே அரசியல் பேசினார். மோடிக்கு எதிர்ப்பாக தான் பேசும் போது மாணவிகள் இரசிப்பார்கள், கைதட்டுவார்கள் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் மோடியைத்தவிர்த்த மற்ற பேச்சுக்களை ரசித்தனர். இந்த நிலையில் கடுமையான கேள்விகளை கேளுங்கள் என்று ராகுல் காந்தி மாணவிகளை பார்த்து கேட்டது அவர்களுக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது.

Share