செய்திகள்

“உண்மை ஜெல்லும்” : ராகுல் உளறல்களும் தங்கபாலுவின் மொழி பெயர்ப்பும்

நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதை தமிழில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கபாலு மொழி பெயர்த்தார். ஆனால் அவர் ராகுல்காந்தியின் பேச்சை மாற்றி, தன்னிஷ்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொழி பெயர்த்தது பலரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் ஆளானது.

ராகுல் “நாங்கள் அதற்காகத்தான் தமிழக மக்களை நேசிக்கிறோம்” என்று சொன்னதை தங்கபாலு ” நாம் அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம் நம்முடைய வலிமையை வளமான நேரத்தில் காட்டுவோம்” என்று மாற்றிக் கூறினார்.

மேலும் ராகுல் காந்தி நான் தமிழக மக்களுக்கு மரியாதை தருகிறேன் என்று ஆங்கிலத்தில் சொல்ல அதற்கு தங்கபாலு, “நரேந்திரமோடி தமிழகத்தின் எதிரி” என மொழிபெயர்த்தார்.

அதேபோல் ‘உண்மை ஜெல்லும்’ என்று ராகுல் சொல்ல, அதற்கு தங்கபாலு ‘உண்மை வெல்லும்’ என்று கூறினார். ஆனால் ராகுல்காந்தி மீண்டும் ‘உண்மை ஜெல்லும்’ என்று கூற செய்வதறியாது தவித்த தங்கபாலு, “உண்மை… நரேந்திரமோடி சிறையிலே இருப்பார்” என்று மொழி பெயர்க்க இதைக் கேட்டவர்கள் நிலைமை தான் பரிதாபமாக இருந்தது.

அதேபோல் ஜம்முகாஷ்மீர் இன்சூரன்ஸ் உரிமையை அம்பானிக்கு கொடுத்துவிட்டதாக ராகுல் கூற, ஜம்மு காஷ்மீரையே அம்பானிக்கு கொடுத்துவிட்டதாக தங்கபாலு மொழி பெயர்த்தார். 

காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் பிரச்சார கூட்டமே காமெடி கூட்டமாகியது என்று இணையத்தில் கிண்டலடித்தாலும், பலர் இதை தங்கபாலு தெரிந்தே தான் இப்படி செய்தார் என்கின்றனர். காங்கிரசும் தி.மு.க-வும் சேர்ந்து திட்டமிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக செய்யும் நாடகம் இது என்பது இணையத்தில் பலரின் கருத்து.

Tags
Show More
Back to top button
Close
Close