இந்தியா

பாலக்கோட்டில் 200 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உண்மைதான்: உருது ஊடக வீடியோவை ஆதாரம் காட்டுகிறார் அமெரிக்கர்..!

பாலகோட்டில் இந்திய விமானப்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்கள் மலைவாசிகள் வசிக்கும் பகுதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டதாகவும், 200 பேர் உயிர்தியாகம் செய்ததாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒப்புக் கொண்டது தொடர்பாக வீடியோ ஒன்றைப் பார்த்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் மறுத்து வரும் நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான செங்கே ஹஸ்னன் ஸெரிங் ((Senge Hasnan Sering)) என்பவர் தமது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இந்திய விமானப்படை பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கிருந்து சடலங்களை அடுத்த நாளோ, அல்லது ஓரிரு தினங்களிலோ கைபர் பக்துங்க்வா என்ற இடத்துக்கு மலை கிராமங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டதாக உருது ஊடகத்தில் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் எதிரிகளை அழிக்க பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வந்த 200 பேர் உயிர் தியாகம் செய்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒப்புக்கொண்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய செங்கே, அந்த வீடியோவின் உண்மைத்தன்மையைத் தம்மால் உறுதிப்படுத்த முடியாது என்ற போதிலும் பாகிஸ்தான் பாலகோட்டில் நடந்த முக்கியமான சம்பவத்தை மறைப்பதாகவும், சர்வதேச ஊடங்களை அருகில் நெருங்க விடுவதில்லை என்றும் கூறினார்.

இந்திய விமானப்படையின் தாக்குதல் வெற்றி பெற்றதற்கு போதிய ஆதாரங்கள் அங்கிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close