இந்தியா

அபிநந்தனை பெருமை படுத்தும் பாகிஸ்தான் டீ கடை காரர்..!

அபிநந்தனின் புகைப்படம் மற்றும் அசத்தல் செய்தியோடு தேநீர் விற்பனை செய்யும் பாகிஸ்தான் டீக்கடை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அங்கே கையில் தேநீருடனும் மனதில் தைரியத்துடனும் அவர் பேசிய வீடியோ, உலகம் முழுவதும் ட்ரெண்டானது.

பிடிபட்ட சமயத்தில் பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தனின் முகத்தில் ரத்தம் வழிய இழுத்துச் சென்றபோதும் நிமிர்ந்த நடையுடன் சென்றார்.

எதிரிகளிடம் இருப்பது தெரிந்தும் பயப்படாமல் துணிச்சலாகப் பேசிய தமிழர் அபிநந்தனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் ரசிகர்கள் உருவாகினர். அவரின் பெயர் ஏராளமான குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன. அவரின் மீசை இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர், அபிநந்தனின் புகைப்படத்தோடு அவரின் தேநீர் விற்பனையை அதிகப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டீக்கடைக்காரரின் விளம்பர உத்தியைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close