செய்திகள்

மோடியின் பெரும்பான்மை பலம் பெற்ற அரசாங்கம் மட்டுமே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் – அமித் ஷா

துரிதமான பொருளாதார மேம்பாட்டுக்கும், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு தகுந்த உறுதியான பதிலடி கொடுப்பதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான ஒரு தெளிவான பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் அத்தியாவசியம் என்று, பா.ஜ.க தலைவர் அமித்ஷா செவ்வாயன்று வலியுறுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு முதல் ஊடக பேட்டியில் அமித் ஷா கூறியதாவது, “மோடிஜியின் உருவில் ஒரு வலிமையான தலைவரை இந்தியாவுக்கு நாங்கள் தந்திருக்கிறோம். அவருடைய ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடுகளில் ஒன்றானது. யாரால் நாட்டை பாதுகாக்க முடியும் என்பது இன்னொரு பிரச்னை. ஆனால் அவர் தான் தலைசிறந்த வல்லுனர். 

மோடியின் தீர்க்கமான தலைமைக்கு மாறாக, எதிர்க்கட்சிகளிடம்  நம்பிக்கையைத் தூண்டும் வகையில் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிந்த தலைவர் எவரும் இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு திசையும் தெரியவில்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் எதற்கும் உதவாது என்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா கூறினார்.

பா.ஜ.க போரை தேர்தலுக்கு பயன்படுத்துவதாகக் கூறும் குற்றச்சாட்டுக்களைப் பற்றி பேசும்போது, பயங்கரவாத தாக்குதலுக்கு பொருத்தமான பதிலை வழங்குவது எப்போதிலிருந்து அரசியல் மயமாக்கப்படுவதில் சேர்ந்தது என்று கேட்டார்.

பா.ஜ.க பெரும்பான்மை பலத்தை வென்றெடுக்கும் என்று கூறிய அவர், நல்ல செயல் திறனான ஆட்சியைக் கொடுத்ததால், பாரதீய ஜனதா கட்சி செல்வாக்கு அதிகம் பெற்று வருகிறது என்றார். தவிர, வடகிழக்கு, மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் தெற்கிலும் நாங்கள் வெற்றி அடைவோம் என்று திரு அமித்ஷா கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close