தமிழ் நாடு

எஸ்கேப் ஆன ஸ்டாலின் – திமுகவினர் ஊழலில் ஊறிப்போனவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி..!

லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா பீஹார், குஜராத் உள்ளிட்ட 19 மாநிலங்களில் லோக்பால் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்துள்ளன. லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமர்வு அமைக்கப்படும். அந்த அமர்வுகளில் ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணையை நடத்துவார்கள்.

ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக லோக் ஆயுக்தா அமர்வு அறிவித்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட அரசு ஊழியர், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர், முதலமைச்சர் என எந்த பதவியில் இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி உடனடியாக பறிக்கப்படும். அந்த அளவுக்கு இந்த சிறப்பு அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. லோக் ஆயுக்தாவில் வரும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது செஷன்ஸ் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகளோ நியமிக்கப்படுவார்கள். அந்த நீதிபதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார் முழு அதிகாரத்துடன் எந்த குறுக்கீடும் இல்லாத வகையில் செயல்படுவார்கள்.

குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையிலும் அரசு ஊழியரின் சொத்துக்களையும், உடமைகளையும் முடக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது. லோக் ஆயுக்தாவில் நடக்கும் விசாரணை குறித்து உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ கேள்வி எழுப்ப முடியாது. அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு உள்ளது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவு குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்டது. லோக் ஆயுக்தா அமைப்பில் இடம் பெற விரும்பி விண்ணப்பித்த 183 பேரிடம் நேர்காணல் நடத்தி குறிப்பிட்ட நபர்களை ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு தேர்வு செய்து தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது.

தெரிவு குழு அளித்த அறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 28 -ம் தேதி நடைபெற்ற முதல் லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை நியமிப்பதற்கான முதல் ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தேடுதல் குழு அளித்த அறிக்கை விரைவில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் சீர்திருத்த துறை அதிகாரி ஸ்வர்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Tags
Show More
Back to top button
Close
Close