தமிழ் நாடு

பொள்ளாச்சி விவகாரத்தில் ஸ்டாலின் மருமகன் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை – அதிர்ச்சியில் திமுகவினர்..!

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகாரளிக்க, ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலால் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவு செய்யப்படுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளதாகவும், அவரது குற்றச்சாட்டால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபரீசனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close