தமிழ் நாடு

தி.மு.க மூத்த தலைவர் மகனுக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம் – சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி! – சந்திசிரிக்கும் ‘ஊழல்’ தி.மு.க நிலைமை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1 கோடி அபராதமும் விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன். கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகளில் இருந்து வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு ₹78 கோடி அனுப்பியுள்ளார்.

முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக சட்டவிரோ பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி, குற்றம் சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ₹1 கோடி அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றம் உத்தரவிட்டார். 

மணி அன்பழகனுக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் ஏற்கனவே சென்னை புழல் சிறையில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close