தமிழ் நாடு

போன முறை பெயில் ஆனதால் சப்ஜெக்டை மாற்றும் திமுக.. கடந்த கால வரலாற்றை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு..!

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிகமுறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இம்முறை சேலம் தொகுதியை திமுக கூட்டணியில் கேட்கும் என பேசப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதியில் அதிமுக 5,56,546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

எதிர்த்து போட்டியிட்ட திமுக 2,88,936 வாக்குகளை பெற்றது. எனவே, இம்முறை அதிமுக சேலத்தில் களமிறங்கும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். கடந்த முறை தோல்வியை சந்தித்த திமுக இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் என அரசில் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு போட்டியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் திமுக மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், மீண்டும் அதிமுக களம் இறங்கும் எனவும் பேசப்படுகிறது. இதனால், சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக-அதிமுக நேரடி போட்டி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close