தமிழ் நாடு

சீட் வேண்டாம் அண்ணே.! உங்களை பார்த்ததே போதும்- விஜயகாந்தை கண்கலங்க வைத்த நெல்லை மாவட்ட கட்சி நிர்வாகி..!

மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேர்காணலை விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் அறைக்கு சென்ற ஆனந்தமணியிடம் நேர்காணல் குழுவினர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஆனந்தமணி, ‘நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. உண்மையில் கேப்டனை நேரில் பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று. அவரைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த், கண் கலங்கியபடி தொண்டனைப் பார்த்து புன்னகைத்தார். கேப்டனை நேரில் பார்த்த நிர்வாகியும் அவரை சந்தித்துவிட்ட மகிழ்ச்சியில் நெஞ்சுருகி நின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காணலின்போது விஜயகாந்தை சந்தித்து பேசியது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

அவர் எதுவும் பதில் சொல்லவில்லையாம். அதே சமயம் மறுப்பும் சொல்லவில்லையாம். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கேப்டன் நின்றால் மற்ற வேட்பாளர்களை விட அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடும் என தேதிமுக தொண்டர்கள் 

Tags
Show More
Back to top button
Close
Close