தமிழ் நாடு

வன்னியரசுக்கும், ரவிக்குமாருக்கும் டாட்டா காட்டும் திருமா..?

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அதே போன்று மீதமுள்ள ஒரு தொகுதியில் ரவிக்குமார் அல்லது வன்னியரசு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது விசிகவில் வேறு ஒருவர் போட்டியிடலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

திமுக ஒதுக்கும் மற்றொரு தொகுதியை தனக்கு கொடுத்தால் திமுக செலவழிக்கும் பணத்தை விட இரண்டு தொகுதிகளிலும் தான் செலவழிக்க தயாராக இருப்பதாக திருமாவுக்கு மிகவும் நெருக்கமானவரும், பெரும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான ஒருவர் முன் வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதனை அடுத்தே தனி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு விசிக சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக ஒதுக்கும் 2வது தொகுதியில் போட்டியிட திருமாவுக்கு மிகவும் நெருக்கமான ரவிக்குமார், வன்னியரசு பெரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தொழில் அதிபருக்கு அந்த சீட் என்று விசிக நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுகிறது. இதனால் ரவிக்குமாருக்கும், வன்னியரசுக்கும் திருமா டாட்டா காட்டலாம் என்று தெரிகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close