இந்தியா

மூத்தக் குடிமக்கள் , மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி சேவை: ஸ்டேட் வங்கி அறிமுகம்..!

வங்கிப் பணிகளுக்காக வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நீண்ட தூரத்திலிருந்து வருவதுடன், நீண்ட நேரம் அவர்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் படும் சிரமங்களை போக்கும் நோக்கத்துடன் வங்கிகள் தங்கள் சேவைகளை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  வீடுகளை தேடிச் சென்று வழங்க வேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டே ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது முதன்முதலாக பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வங்கிக் கிளைகளை சுற்றி 5 கி.மீ தூரம் வரையுள்ள 70 வயதுக்கு மேலுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதற்காக வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு 100 ரூபாய் கட்டணமும், வங்கி சாரா பரிவர்த்தனைகளுக்கு 60 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. 
இது சரியான முறையிலும்,  விரைவான சேவையாகவும் அமல் படுத்தப்பட்டால் மிகவும் நன்மையாக இருக்கும் என மூத்த குடிமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close