தமிழ் நாடு

அந்த இருபது கேள்விகள் மட்டும் தான்! முன்னரே தயாரிக்கப்பட்டு கொடுத்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்த ராகுல் காந்தி! வெளிவந்த உண்மை! #GoBackRahul

ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இன்று 3000 மாணவியருடன் உரையாடினார். இந்த உரையாடல்களில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார், அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்ற தொணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர் மட்டும் சமூக வலைதளங்களில் பொங்கி வந்தனர். மோடி இது போல் பதிலளிப்பாரா என்று வீரவசனம் வேறு பேசி காமெடி செய்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் தந்தை இந்த நிகழ்வு எவ்வாறு நடந்தது என்பதை புட்டு புட்டு வைத்தார்.

அந்த பதிவில் 20 கேள்விகள் முன்னரே தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாம். அதற்கான பதில்களை தயாரித்து வந்து பேசியுள்ளார் ராகுல். வேறு கேள்விகள் ஏதும் கேட்க முடியாதாம் இந்த நிகழ்வில்.

அதுவும் அந்தந்த கேள்வி எந்த மாணவி கேட்பார் என்பதை கூட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து பெயரை சொல்லி அழைத்து அம்மாணவிகளை கேள்வி கேட்க செய்துள்ளனர்.

இந்த செட்-அப் டிராமாக்கு தான் இவ்வளவு முட்டு கொடுத்தீர்களா என கலாய்த்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள். பப்பு தான் பப்பு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close