செய்திகள்

கீழே விழுந்த F-16 பைலட் பற்றி அடையாளம் தெரியும் – நிர்மலா சீதாராமன்

பிப்ரவரி 27 ம் நாள், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானின் மிக் 21 பைசன் மூலமாக பாகிஸ்தானின் F-16 சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை செலுத்திய பாகிஸ்தானின் பைலட்டை இந்திய படையினருக்கு அடையாளம் தெரியும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தெரிவித்தார். ஆனால் அவர் எந்த மேல் விவரத்தையும் கொடுக்க மறுத்துவிட்டார்.

கார்கில் போரின் போது பாகிஸ்தான் படையினரின் “தியாகங்களை” ஒப்புக் கொள்ளாதது போல, F-16 அல்லது அதன் பைலட்டை இழந்ததையும் பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் கிராமவாசிகள் எஃப் -16 பைலட்டை தாக்கியுள்ளனர். அதனால் அவர் மருத்துவமனையில் இறந்திருக்கலாம். பாகிஸ்தான் எதையும் மறுக்கும் நிலையில் தான் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

பாகிஸ்தான் இராணுவத்தின் காவலில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனைப் பற்றி கூறும் போது, “அவருடைய பேரார்வம் அதிகமாக உள்ளது. அவர் அநுபவித்த அத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அவர் நிதானம் இழக்காமல் தான் உள்ளார். அபிநந்தனிடம் பேசும்போது அவர் தனது கடமையைச் செய்ததாகவும் அந்த மாதிரி சூழ்நிலைக்கு ஏற்ப நடப்பதற்கு தனக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது என்றும் கூறினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த விதமான தீமைகளையும் விதைக்கவில்லை” எனறும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close