செய்திகள்

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவரின் மகன் பா.ஜ.க-வில் ஐக்கியம்: மராட்டியத்தில் தொடர்ந்து காலியாகும் எதிர்கட்சிகளின் கூடாரம்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுஜய் விக்கி பாட்டீல். இவர், சட்டமன்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ராதாகிருஷ்ணா விக்கி பாட்டீலின் மகனும், மூத்த காங்கிரஸ் தலைவர் பாலாசாகீப் விக்கி பாட்டீன் பேரனும் ஆவார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், அகமது நகரில் காங்கிரஸ் கட்சி தனக்கு டிக்கெட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் மும்பையில் உள்ள எம்சிஏ அரங்கில், பாஜக மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே மற்றும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இன்று காலை சுஜய் பாஜகவில் இணைந்தார். 

இது குறித்து சுஜய் பேசுகையில், ‘பா.ஜ.க-வில் இணைவது எனது தனிப்பட்ட விருப்பம் ஆகும். மகாராஷ்டிரா மட்டுமல்ல பொதுவாக அனைத்து இடங்களிலும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது . தற்போது பா.ஜ.க-வில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறினார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் இவருக்கு பா.ஜ.க சார்பில் டிக்கெட் பெற்றுத்தர உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஜடேஜா பிரதமருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அவருடைய மனைவியும் பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அந்த கட்சியின் எம்.பி அனுபம் ஹஸ்திரா சென்ற வாரம் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் மோடியின் நிர்வாகத்திறனை புகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags
Show More
Back to top button
Close
Close