செய்திகள்

உலக அளவில் ட்ரெண்டான #GoBackRahul

கடந்த டிசம்பர் மாதம் கருணாநிதியின் சிலையை திறக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் சென்னை வந்தனர். அச்சமயத்தில் லட்சக்கணக்கான ட்வீட்கள் மூலம் தமிழர்கள் GoBackSonia என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று ராகுல் காந்தி தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க கன்னியாகுமரி வருகிறார். அதற்கு முன்னதாக சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து காலையில் இருந்தே தமிழர்கள் ட்விட்டரில் #GoBackRahul என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ட்வீட்கள் ஏற்கனவே பகிரப்பட்டு வரும் நிலையில் தமிழர்கள் ராகுல் வருகையை விரும்பவில்லை என்று உறுதியாகிறது.

தற்போது #GoBackRahul ட்ரெண்டிங் உலக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close