தமிழ் நாடு

பொள்ளாச்சி கொடூர சம்பவத்தின் முதல் குற்றவாளியின் நெருங்கிய நண்பரின் தந்தையின் தலைமையில் இன்று கனிமொழி எம்.பி நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்? உச்சபட்ச அரசியல் ஆதாயம் தேடும் வேட்டையில் தி.மு.க? #PollachiSexualAbuse

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை​ சம்பவத்தை அறிந்ததில் இருந்தே அதிர்ந்து போய் உள்ளது. இப்படிப்பட்ட பாதக செயல்களை செய்த அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற ரீதியில் பொது மக்களிடமே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

ஆனால், இந்த விஷயத்த்தில் எப்படியேனும் அரசியல் ஆதாயம் தேடி அ.தி.மு.க-வை அவமானப்படுத்த வேண்டும் என்று முழு வீச்சில் இயங்கி வருகிறது தி.மு.க எனும் அரசியல் இயந்திரம்​. ​முதலில் ட்விட்டரில் #ArrestPollachiRapists என்று இருந்த பொதுவான ஹேஷ்டேகை #ArrestPollachiADMKRapists என்று ஒரு கட்சிக்கு எதிரான கோஷமாக மாற்ற முனைந்தனர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும்.

பிறகு, பாலிமர் செய்தி வெளியிடாத செய்திகளை போட்டோஷாப் செய்து, அ.தி.மு.க அமைச்சர் வேலுமணி ம​ற்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது அவதூறு பரப்பி உண்மை பிரச்சனையை மழுங்கடித்து அ.தி.மு.க எதிர்ப்பை பிரதானப்படுத்த முனைந்தது தி.மு.க கூட்டம்.

அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பாலிமர் செய்தி நிறுவனத்தை அழைத்து இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் தங்கள் தொலைகாட்சியினுடையதா என்று விசாரிக்கவே இல்லை என்று பதில் வர, தி.மு.க-வின் கோர அரசியல் முகல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்பது இவர்கள் நோக்கமல்ல, தங்களுக்கு போட்டி எதிர் கட்சியான அ.தி.மு.க-வை எப்படியேனும் களங்கப்படுத்தி, பொய் செய்திகளை பரப்பு குளிர் காய வேண்டும், அதுவே நோக்கம்.​​​

பிறகு, கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் பிணையில் வெளிவந்து விட்டார்கள் என்று போலி செய்தியை தி.மு,க ஆதரவாளர்கள் பரப்பினர்.

ஆனால் அப்படி பிணை எதுவுமே வழங்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த போலி செய்தியினால் பயனடையப்போவது யார்? அரசியல் ஆதாயம் பெறுவது யார்? உணர்ச்சிகளி கிளப்பு அதில் குளிர் காய்வது யார்? ஆகியவற்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அடுத்தது, இந்த சம்பவத்தில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை எப்படியேனும் களங்கப்படுத்த வேண்டும் என்று செயல்பட்டனர்.அவரின் மகன் குற்றவாளிகளில் ஒருவன் என்றும், அதனால் தான் வழங்கப்படாத பிணை வழங்கப்பட்டதாகவும் போலி செய்தியினை பரப்பி வந்தனர்.

கிட்டத்தட்ட சமூக வலைதளம் மூலம் பொள்ளாச்சி ஜெயராமன் அரசியல் தலையீட்டால் தான் இந்த குற்றம் மழுங்கடிக்கப்படுகிறது என்ற தோரணையை திட்டமிட்டு தி.மு.க-வினர் அழகாக கட்டமைக்கவே செய்தியாளர்களை சந்தித்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.

அவர் கூறியதாவது “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தி.மு.க திட்டமிட்டு அரசியல் செய்ய முயற்சிக்கிறது! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்! என்றார். அவர் மேலும் அளித்த பேட்டியில் “இந்த செய்தி என் கவனத்திற்கு வந்தவுடன் நானே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பாதிக்க பட்ட பெண் வீட்டாரிடம் கூறினேன், மேலும் இந்த விசயத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததும் நானே! இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளிகளும் தப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்! மேலும் நாகராஜ்-க்கு இதில் உள்ள தொடர்புகள் தெரியவந்ததும் அவரை உடனடியாக கட்சியில் இருந்து விலக்க முடிவெடுத்தோம்! பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்,அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது,என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன்” எனவும் காட்டமாக கூறினார்.

தொண்டர்கள் செய்து வரும் இவ்வாறான அவதூறு மற்றும் பொய் பிரச்சாரங்களுக்கு ஆதரவு அளித்து மேலும் அவர்களை உசுப்பேற்றி அதில் தனது கட்சிக்கு ஏதும் ஆதாயம் கிடைக்காதா என்ற நோக்கத்தில் தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க இளைஞரணி துணை செயலாளர் அ.தி.மு.க-வை தொடர்பு படுத்தி ஒரு கார்ட்டூனை பகிர்கிறார்.

சட்ட காரணங்களுக்காக, தெளிவாக இவர்கள் கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட #ArrestPollachiADMKRapists என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தாமல் #ArrestsPollachiRapists என்ற பொதுப்படையான ஹேஷ்டேக் இந்த கார்ட்டூனால் பகிரப்படுகிறது.

இவை அனைத்தும் நடந்தேறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான் தி.மு.க நிர்வாகிகளுக்கும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளிவர தொடங்கின.

முதலில் நக்கீரனால் பகிரப்பட்ட செய்தியில் குற்றவாளியாக இடம்பெற்றிருக்கும் பைக் பாபு என்பவர் தி.மு.க பொறுப்பாளர் என்று சமூக வலைதளம் மூலம் வெளியாகியுள்ளதாக ட்விட்டரில் சிலர் ட்வீட் செய்தனர்.

இவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படங்கள் கூட எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. (இவை அனைத்தும் ட்விட்டர் மற்றும் முகநூலில் பலர் பதிவேற்றம் செய்யப்பட்டதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் என்பதால் உண்மைத்தன்மையை சரிபார்க்க இயலவில்லை)

தி.மு.க பைக் பாபுவின் முகநூல் கணக்கில் நண்பராக இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இவை அனைத்திலும் உச்சபட்ச அரசியல் என்பது இந்த செய்தி தான். இன்று மாலை இந்த சம்பவத்தை கண்டித்து கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று தி.மு.க அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை யாரென்று பார்த்தால் தென்றல் செல்வராஜாம்.

சரி அதனால் என்ன என்று உற்று நோக்கினால் இந்த தென்றல் செல்வராஜின் மகனான தென்றல் மணிமாறனும் இந்த கொடூர வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசும் நெருங்கிய நண்பர்களாம். முக்கிய முதல் குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முகநூலில் வாழ்த்து சொல்லியுள்ளார் தென்றல் மணிமாறன். தென்றல் மணிமாறனின் முகநூல் கணக்குக்கு சென்று பார்த்தால் அனைத்து தி.மு.க பெரும்புள்ளிகளுடனும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

தென்றல் மணிமாறன் திருநாவுக்கரசுவிற்கு 2017 மற்றும் 2018-ஆம் பகிர்ந்த பிறந்தநாள் வாழ்த்து பகிர்வுகளை கீழே காணலாம்.

இந்த சம்பவம் வைரல் ஆகவே , தி.மு.க தென்றல் மணிமாறன் தன் முகநூலில் திருநாவுக்கரசுடன் எடுத்த புகைப்படங்களை அழித்துள்ளார்.(குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்??) தான் எந்த தவறும் செய்யாத பட்சத்தில் இந்த புகைப்படங்களை ஏன் அழிக்க வேண்டும்? திருநாவுக்கரசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போட்டோவையும் அழித்து விட்டு தன் தந்தை தலைமையில் நடக்கும் தி.மு.க போராட்டதில் தி.மு.க எம்.பி கனிமொழியுடன் சேர்ந்து தன் உயிர் நண்பன் திருநாவுக்கரசுக்கு எதிராக போராட்டத்திலும் குதிக்க உள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் ஆக இருக்கட்டும், தி.மு.க நிர்வாகிகளாக இருக்கட்டும், எந்த கட்சியினராகவும் இருக்கட்டும். இந்த பாதக செயலில் தொடர்புள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையின் மீது நம்பிக்கை வைப்போம். தனது அரசியில் ஆதாயத்திற்கான இந்த சம்பவத்தை திசைதிருப்ப யாசிக்கும் பிணந்தின்னி கழுகுகளை கருவறுப்போம்.

Tags
Show More
Back to top button
Close
Close