செய்திகள்

ரமலான் போது தேர்தல் பற்றிய சர்ச்சை கருத்து : தக்க பதிலடி கொடுத்த ஓவைசி மற்றும் ஷா நவாஸ்

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில் மே 6ம் தேதி முதல் மே 19 வரை மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து மேற்கு வங்க த்ரிணாமூல் காங்கிரஸின் மூத்த கட்சி தலைவர் மற்றும் கொல்கத்தா மாநகராட்சி மேயர் பிர்ஹாத்  ஹக்கீம், ரமலான் மாதத்தில் விரத நாட்களில் தேர்தல் வைத்தது சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட வருவதை தடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மஜ்லிஸ்-இ-இத்திஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாவூதின் ஓவைசி, பிர்ஹாத் ஹக்கீம் அவர்களின் ரமலான் பற்றிய பேச்சை தேவையில்லாத கருத்து என்று கூறியுள்ளார். 

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முழு தேர்தல் அட்டவணையை வரவேற்று பேசிய அசாவூதின் ஓவைசி, ரமலானை தேர்தலுடன் சம்பத்தப் படுத்தி பேசுபவர்கள் இஸ்லாமியர்களைப் பற்றி அறியாதவர்களே ஆவர் என்றார்.

மேலும் அவர் கூறும்போது தேர்தல் என்பது நீண்ட நாட்கள் நடைபெறும் ஒரு அலுவல். ரமலானுக்கு முன்னர் அல்லது பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்றார். 

ரமலான் மாதத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய சர்ச்சைக்கு பதில் அளித்து பேசிய பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஷா நவாஸ் ஹுசைன், ஹிந்துக்களின் விரத நாட்களான நவராத்திரியிலும் தான் தேர்தல் நடைபெறுகிறது என்றார். இது மாதிரியான சர்ச்சைகளை வேண்டுமென்றே எதிர்கட்சிகள் பரப்பி மதத்தின் பேரால் நாட்டைத் துண்டு போட நினைக்கின்றன என்று திரு ஷா நவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close