தமிழ் நாடு

காரியம் ஆகணும்னா.. நாங்க எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவோம் – வழக்கை வாபஸ் பெற்றது தி.மு.க : தேர்தலுக்காக நடக்கும் உள்ளடி வேலை.!

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை. வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் பின்னர் தெரிவித்தது. 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனுவில், இடம்பெற்ற ஜெயலலிதாவின் கைரேகை, அவரது அனுமதி இல்லாமல் பெறப்பட்டதாக திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பை வெளியிட வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் தள்ளிப் போவதாகவும், வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சரவணன் அறிவித்துள்ளார். எனவே வழக்கை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை தனது வழக்கறிஞர் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக நினைத்திருந்தால் இந்த வழக்கை முன்கூட்டியே வாபஸ் பெற்றிருக்க முடியும். ஆனால் தேர்தல் வரும் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு திமுகவின் சுயலாபத்துக்காகவே அன்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எடுக்கப்படவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close