ஆப்கானிஸ்தானின் லாகர், வார்டாக், பாக்டிகாக் ஆகிய மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாகவும், தரை வழியாகவும் ஆப்கான் இராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் 60 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

போர் விமானங்கள் இடைவிடாது குண்டு மழை பொழிந்ததில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் நிர்மூலமாக்கப்பட்டதுடன் தலீபான்களுக்கான ரேடியோ கோபுரம் மற்றும் அவர்களின் ஆயுதகிடங்குகளும் அழிக்கப்பட்டன.

இந்த அதிரடி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆப்கான் ராணுவம் தெரிவித்தது. மேற்கண்ட மாகாணங்கள் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பிறகு பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைவாழ் பழங்குடிமக்கள் வாழும் மலைப்பகுதிகளில் பதுங்கிக் கொள்வதும் இவர்களின் வழக்கம். பாகிஸ்தான் இராணுவம் இவர்களை கண்டுகொள்வதில்லை. பிடித்துக் கொடுப்பதும் இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா புல்வாமா தாக்குதலை அடுத்து எல்லைதாண்டி விமானத்தாக்குதல் நடத்தியது. இதில் 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மடிந்தனர். பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசப்படுத்தப்பட்டன. அதே பாணியில் தற்போது ஆப்கன் அரசும் அமெரிக்காவின் துணையுடன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.    

Share