பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என்று இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா டி.வி.டி.என். எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பு:-

பாரதிய ஜனதா கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேரதலில் 238 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 82 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் பெறும் இடங்களை கருத்தில் கொண்டு அந்த கூட்டணிக்கு 285 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைத்தால் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 126 இடங்கள் பெறவே வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். சமாஜ்வாடி கட்சிக்கு 18 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி காரணமாக பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும். என்றாலும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிகள் பா.ஜனதாவின் உத்தபிரதேச இழப்பை ஈடு செய்யும் வகையில் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share