செய்திகள்

தமிழ் மொழியையா வளர்த்தீர்கள் ? கனிமொழி-யை தானே வளர்த்தீர்கள் : சிக்ஸர் அடித்த தமிழிசை

பா.ஜ.க-வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,”பாரத பிரதமர் மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு ₹6,000 மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு  தமிழக அரசு ₹2,000 வழங்கி வருகிறது. வரிசையில் நிற்கவேண்டாம். இடைத்தரகர்கள் கிடையாது. நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் DBT மூலம் செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல். ஆனால் மோடி ஆட்சியில் ஒரு ஊழல் கூற முடியுமா?

தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்கிறார். 5 முறை தமிழகத்தை ஆண்ட நீங்கள் ஏன் தமிழ் மொழியை வளர்க்கவில்லை. கனிமொழியை தானே வளர்த்தீர்கள்.

Tweet by News 7 Tamil

மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை. இது வரையிலும் வைகோ இருந்த கூட்டணி வெற்றி பெற்றது கிடையாது. எனவேதான் ம.தி.மு.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது”, என்று பேசியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close