இந்தியா

56 பேருக்கு பத்ம விருதுகள் ! கலக்கிய தமிழக சாதனையாளர்கள் !

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.  மலையாள நடிகர் மோகன்லால், தமிழகத்தை சேர்ந்த பிரபுதேவா, பங்காரு அடிகளார் உள்ளிட்டோர் பத்ம விருதுகளை பெற்றனர். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் முதற்கட்டமாக 58 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு 16ம் தேதி விருதுகள் வழங்கப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close