இந்தியா

விழாக்கோலம் பூண்ட ஜனாதிபதி மாளிகை.. இன்று சாதனையாளர்களை சரித்திரத்தில் இடம்பெறச்செய்யும் நிகழ்வு..! முன்னரே வெளியான அறிவிப்பு.!

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவபடுத்தும் விதமாக அவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார்.

2019ம் ஆண்டிற்கான பத்ம விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகள் மொத்தம் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டன. அதில் முதல் கட்டமாக 56 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

விழாவில் மறைந்த நடிகர் காதர் கான், நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா, அகாலிதளம் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா, மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நயார் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close