மக்களவை தேர்தல் அறிவிப்பையொட்டி அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வேறு வேறு கட்சியினராக இருந்தாலும் இந்தியாவின் முன்னேற்றம் என்ற ஒரே இலக்குடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tweet by Narendra Modi

தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், பல ஆண்டுகளாக தேர்தலை ஒழுங்காக ஏற்பாடு செய்வதற்காக, தேர்தல் ஆணையம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறியுள்ளார். 
இதோ, ஜனநாயகத்தின் திருவிழா என்று தேர்தலை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, 2019 லோக்சபா தேர்தலில் ஒரு வரலாற்றுமிக்க வாக்குப்பதிவு இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Share